உலகம் செய்தி

மேற்கு கரையில் தீவிரமடையும் வன்முறை: இஸ்ரேல்மீது துருக்கி குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருவதாக துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேல் ராணுவம் , ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அப்பாவி மக்கள் கொல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் செயற்படும் பயங்கரவாதக் குடியேற்றவாசிகளால் வெள்ளிக்கிழமை நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் கொலைகள் “இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலைக் கொள்கையின்” விளைவு.” என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குற்றங்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதைத் தடுக்கவும், இதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும் சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் துருக்கிய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி