இந்தியா செய்தி

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் ‘வீதி விபத்து’

இந்தியாவில் நாளாந்தம் 502 பேரை பலியெடுக்கும் 'வீதி விபத்து'

இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 502 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

மாநில ரீதியாகப் பார்க்கும்போது, வீதி விபத்து உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே மிக அதிகளவிலான உயர்வு பதிவாகியுள்ளது.

அம்மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டில் 24,118 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 27,550 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், பஞ்சாப் மாநிலத்தில் வீதி விபத்து மரணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அங்கு 2024 ஆம் ஆண்டில் 4,759 ஆக இருந்த உயிரிழப்புகள், 2025 ஆம் ஆண்டில் 3,062 ஆகக் குறைந்துள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டில் பதிவான மொத்த விபத்துகளின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 5.3% அதிகரித்து, 5.1 லட்சத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 3.5% அதிகரித்துள்ளதாக அத்தரவுகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி