போராட்டங்கள் உக்கிரம்: இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்;. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது ராஜினமாவை அறிவித்துள்ளார்.





