இந்தியா தமிழ்நாடு

ஆளுநராகிறார் ஓ.பி.எஸ்? புது வியூகம் வகுக்கிறது பா.ஜ.க.!

  • February 13, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam (OPS) விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பா.ஜ.க. BJP தீவிரம் காட்டிவருகின்றது. பல பகுதிகளில் வெற்றிநடை போட்டாலும் தமிழகத்தில் கால் பதிப்பதென்பது பா.ஜ.கவுக்கு தொடர்ந்து எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. எனவே, அ.தி.மு.க. தலைவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே தி.மு.கவை வெல்ல முடியும் என பா.ஜ.க. […]

இந்தியா

விமான விபத்து குறித்து இத்தாலி ஊடகம் சர்ச்சை செய்தி: இந்தியா மறுப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

அகமதாபாத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் இத்தாலி ஊடகமொன்று வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. “விசாரணை முடிவடையாத நிலையில், ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்” என்று இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி விமான விபத்து தொடர்பில் இத்தாலியின் கோரியர் டெல்லா செரா என்ற நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், விமானி […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு: பிரிட்டன் 2ஆவது இடத்தில்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 08 வரையான காலப்பகுதிக்குள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 103 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 64 ஆயிரத்து 500 பேரும், பிரிட்டனில் இருந்து 38 ஆயிரத்து 823 பேரும், ரஷ்யாவில் இருந்து 34 ஆயிரத்து 80 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து 23 ஆயிரத்து 177 பேரும், […]

இலங்கை செய்தி

சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவரான லங்கா சமசமாசக் கட்சியின் Lanka Samasamasha Party தலைவர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண Tissa Witharana காலமானார். (91 வயது) உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிறி ஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண 2004ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். மஹிந்த […]

விளையாட்டு

இந்திய அணி புதிய சாதனை!

  • February 13, 2026
  • 0 Comments

T-20 World Cup – உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா India படைத்துள்ளது. நமீபியா Namibia அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6.5 ஓவர்களில் இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவர்களில் 100 ஓட்டங்களை குவித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனை இந்திய அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. […]

விளையாட்டு

ICC World Cup: இன்றைய போட்டிகள் விபரம்!

  • February 13, 2026
  • 0 Comments

ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 19 ஆவது லீக் ஆட்டத்தில் Australia மற்றும் Zimbabweஅணிகள் மோதுகின்றன. Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் 20 ஆவது லீக் Canada , United Arab Emirates அணிகள் மோதுகின்றன. Chennai இல் இரவு 7 மணிக்கு நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் […]

அரசியல் இலங்கை

சுவிஸ் தூதரக சந்திப்பை குழப்பியது யார்? கஜேந்திரகுமார் விளக்கம்!

  • February 13, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருந்த சந்திப்புக்கு தமது கட்சியே இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam நிராகரித்துள்ளார். யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை நிராகரித்தார். “தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 15ஆம் திகதி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் […]

உலகம்

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் BNP வெற்றி நடை!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. எனப்படுகின்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party (BNP) வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தமது கட்சி பெற்றுள்ளது என BNP இன்று அறிவித்தது. இதற்கமைய பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் Tarique Rahman பதவி ஏற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் புரட்சி வெடித்தது. இதனையடுத்து மக்கள் போராட்டமும் […]

அரசியல் இலங்கை

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? பேராளர் மாநாட்டை நடத்துகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி!

  • February 13, 2026
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நிகழ்வுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்தே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், […]

அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!

  • February 12, 2026
  • 0 Comments

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார். சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி […]

error: Content is protected !!