உலகம் செய்தி முக்கிய செய்திகள்

164 பேர் பலி – 971 பேர் காயம்: சர்வதேச உதவி கோருகிறது ஐ.நா.

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக லா குவைரா மாநிலம் இடிபாடுகளால் சூழப்பட்ட ஒரு பேரிடர் மண்டலமாக மாறியுள்ளது.

நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அங்கிருந்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் நம்பிக்கை அளிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடந்த நூற்றாண்டில் அந்தப் பிராந்தியத்தில் பதிவான மிகவும் வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

அதேவேளை, வெனிசுலாவுக்கு அத்தியாவசிய உதவிகளை பல நாடுகளும் வழங்கிவருகின்றது. ஐ.நாவும் அவசர உதவிக்குரிய அழைப்பை விடுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி