உலகம் செய்தி

ஊடக கட்டுப்பாடுகளை வெனிசுலா உடன் நீக்க வேண்டும் – ஐ.நா.

நிலநடுக்கத்தில் 32 பேர் இறந்துள்ளனர் என்றே அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் ஆயிர்ககணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

வெனிசுலாவில் நிலவும் கடுமையான அரசியல் மற்றும் சமூகச் சூழலில், தகவல் பரிமாற்றத்திற்கான தடைகளை உடனடியாக நீக்குமாறு ஐ.நா.சபை அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியான நிலையில், பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் முக்கிய கடமையாகும் என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

இக்கட்டான இத்தருணத்தில் வெளிப்படையான ஊடகச் செயல்பாடுகள் மட்டுமே பேரழிவுகளைத் தடுக்க உதவும் என்று சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.

வெனிசுலாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. எனினும், அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதில் அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்படுகின்றது. டிஇந்நிலையிலேயே ஐ.நா. இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி