ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். 27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின் மேல்பகுதியில் உள்ள சம்னர் (Sumner) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும், அவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக […]













