உலகம் செய்தி

ஈரானில் வெளிநாட்டு ஊடுருவலைத் தடுக்க புதிய சட்டம்

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாட்டு ஊடுருவல்களைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் முக்கிய அம்சங்களுக்கு ஈரானின் தீவிரப் பழமைவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை நாட்டின் கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான 12 நாள் போருக்குப் பிறகு, போர்க்கால தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட உளவு எதிர்ப்புச் சட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையிலேயே இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைந்து, ஈரான் மீதான தற்போதைய போர்ச் சூழலில் மேலும் இராணுவ மோதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற வாய்ப்புகளுக்கு மத்தியில், இந்த வார தொடக்கத்தில் இந்த திட்டம் குறித்த சர்ச்சைகள் வெடித்தன.

இருப்பினும், ஈரானின் எதிரிகளின் செல்வாக்கை முறியடிப்பதற்காக இந்தத் திட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது என ஷிராஸ் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிரப் பழமைவாத பாராளுமன்ற உறுப்பினர் ரூஹுல்லா நெஜபத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்லைன் பாராளுமன்ற அமர்வின் போது ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம், தனிநபர் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் என பொதுமக்கள், நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் சில பிரிவினர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 19 சரத்துக்களைக் கொண்ட இந்த சட்டமூலத்தின் வரைவு அரசு சார்ந்த ஊடகங்களால் வெளியிடப்பட்ட நிலையில், 33 சரத்துக்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட வரைவு புதன்கிழமை வெளியானது.

இந்த சட்டமூலம் சட்டமாக மாறுவதற்கு முன்னர், பாராளுமன்றத்தின் இறுதி அங்கீகாரத்தையும், ‘பாதுகாவலர் குழு’ (Guardian Council) என அழைக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சட்ட மேற்பார்வை அமைப்பின் ஒப்புதலையும் பெற வேண்டும். இந்தச் செயல்முறைக்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.

வரலாற்றில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவு மற்றும் வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 2020 தேர்தல் முதலே பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரப் பழமைவாத உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பொதுக் கோட்பாடுகள், வெளிநாடுகளுடனான தொடர்புகளுக்குப் பரந்த அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி