ஈரான்மீது பொருளாதாரத் தடை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கை புதிய பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்கு “எந்தவொரு வழியிலாவது உயிர்நாடியாகச் செயல்படும்” நாடுகளுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், “பொருளாதாரப் போர்” முன்னெடுக்கப்படும் என்றும் அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஸ்காட் பெசென்ட் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
இது தொடர்பான விரிவான விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகத் தொடரும் போரினால் மில்லியன் கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் தேக்கமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு வியாழக்கிழமை உயர்ந்தது.




