உலகம்

நேட்டோ பாதுகாப்பு செலவீனம் – நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் 05 நாடுகள்

  • July 7, 2026
  • 0 Comments

ஐந்து நேட்டோ உறுப்பு நாடுகள் 2026-ஆம் ஆண்டிலேயே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காராவில் நடைபெறவிருந்த   உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இன்று  நேட்டோ வெளியிட்ட  புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடுகள் 02 சதவீதத்தை மட்டுமே ஒதுக்க நிர்ணயித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டணி உறுப்பு நாடுகள், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என அமெரிக்க […]

உலகம்

ஹோர்மூஸ் ஜலசந்தி விவகாரம் – அரபு நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் நேட்டோ குழுவினர்

  • July 7, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதில் நிலவும் முட்டுக்கட்டை குறித்து விவாதிப்பதற்காக, நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் இன்று வளைகுடா அரபு நாடுகளின் அமைச்சர்களைச் சந்திக்க உள்ளனர். அமெரிக்கா-ஈரான் இடையே ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் பல வாரங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதற்றங்களை தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அமைச்சர்களை நேட்டோ தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். […]

ஐரோப்பா

நேட்டோவை சோதிக்க போலந்தை குறிவைக்கும் ரஷ்யா

  • July 3, 2026
  • 0 Comments

நேட்டோவின் உறுதியைச் சோதிக்கும் நோக்கில் ரஷ்யா போலந்து மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் போலந்தின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது அல்லது தரைவழி ஊடுருவல் கூட இடம்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளுக்குள் பதற்றத்தை அதிகரிக்கவும், உக்ரைனுக்கு உதவுவதை தடுக்கவும்  ரஷ்யா இத்தகைய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லைப் பகுதியில் ஒரு “கலப்பினத் தாக்குதல்” நடத்தப்படுவது தொடர்பில் ரஷ்யா பரிசீலித்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது விபத்து நடந்ததுபோல் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதல் : இரகசிய கூட்டுப் பயிற்சியில் நேட்டோ நாடுகள்!

  • May 23, 2026
  • 0 Comments

நேட்டோவின் இங்கிலாந்து தலைமையிலான கூட்டு விரைவு எதிர்வினைப் படை (ARRC), நேசப் படைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது. இந்த பயிற்சிக்காக பயன்பாட்டில் இல்லாத சேரிங் கிராஸ் சுரங்கப்பாதை தளம் இரகசிய முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சிற்கு ‘ஆபரேஷன் ஆர்கேட் ஸ்ட்ரைக்’  (Operation Arcade Strike ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்போது  ரஷ்யாவிற்கு எதிராக ‘ஆழ்கடல் தாக்குதல்’ நடவடிக்கைகளை உருவகப்படுத்தும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. […]

ஐரோப்பா

மற்றுமொரு நேட்டோ நாடு மீதும் குறி : துருப்புக்களை அனுப்ப மறுப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

போலந்திற்கு 4,000 அமெரிக்கப் படைகளை அனுப்பும் முடிவை பென்டகன் மாற்றியமைத்துள்ளது. நேட்டோவில் எழுந்துள்ள விரிசல் நிலை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பை பென்டகன் குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது போலந்திற்கான இராணுவத்தை அனுப்புவதிலும் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. ஈரான் போர் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவை  இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். பென்டகன் இது […]

ஐரோப்பா

நேட்டோவின் பிளவு : போலந்து பிரதமர் எச்சரிக்கை!

  • May 3, 2026
  • 0 Comments

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க அரசாங்கங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, நேட்டோ “தொடர்ச்சியான சிதைவை” சந்தித்து வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், அதிபர் ட்ரம்பிற்கும் ஜெர்மனியின் அதிபர் மெர்ஸிற்கும் ( Merz) இடையே ஏற்பட்ட இராஜதந்திர மோதல், நேட்டோவின் சரிவின் தொடக்கத்தைக் குறிப்பதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், […]

ஐரோப்பா

நேட்டோவை கலைக்கும் முழுவீச்சில் ட்ரம்ப்!! ஸ்பெயினுக்கு அச்சுறுத்தல்!

  • May 1, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க நேட்டோ நட்பு நாடுகள் உதவாத நிலையில் கடும் விமர்சனங்களை வெளியிட்ட அவர் தற்போது இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார். மேலும், ஜெர்மனியில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஸ்பெயின் மீது வர்த்தகத் தடை விதிப்பதாக அச்சுறுத்தியிருந்தமை குறிப்படத்தக்கது.  

ஐரோப்பா செய்தி

நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க அழுத்தம்? பென்டகன் மின்னஞ்சல் சர்ச்சை

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகனிலிருந்து வெளியானதாகக் கூறப்படும் ஒரு உள் மின்னஞ்சல், தனது நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நட்பு நாடுகளை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமையைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவுகள் மீது அர்ஜென்டினாவும் உரிமைக் கோரிக்கை வைத்துள்ளது. […]

உலகம்

அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!

  • March 20, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை ‘கோழைகள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி” என்றும் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. இப்போது, ​​அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்துடன், அந்தப் போராட்டம் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்ட நிலையில், தாங்கள் செலுத்த நிர்பந்திக்கப்படும் அதிக எண்ணெய் விலைகளைப் பற்றிப் புகார் […]

உலகம் செய்தி

உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: ட்ரம்ப் கூறுவது என்ன?

  • December 16, 2025
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து எமக்கு பேராதரவு கிடைக்கின்றது. அவர்களை போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேற்குலக நாடுகள் தமக்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை […]