ஐரோப்பா முழுவதும் கலப்பு போர் அச்சம் – எல்லையை சோதனை தீவிரப்படுத்தும் சுவீடன்
ரஷ்யாவுடன் தொடர்புடைய விரோத சக்திகளால் நடத்தப்படும் நாசவேலைகள் மற்றும் பிற கலப்புத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, எல்லைச் சோதனைகளை நடத்தப்போவதாக சுவீடன் அறிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கை அடுத்த ஆறு மாதக் காலத்திற்கு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக இடம்பெற்று வரும் மோதல்போக்கு மற்றும் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் கலப்பு போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுவீடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஷெங்கன் பகுதியின் ஒரு அங்கமாக உள்ள சுவீடன், கடந்த பத்தாண்டுகளில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சோதனைகளை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இப்போது தனது முயற்சியை நேரடியாக ரஷ்யாவுடன் தொடர்புபடுத்துகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதித்துறை அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் Gunnar Strommer , “உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு ஆகியவை நாம் ஒரு கடுமையான பாதுகாப்பு சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது என்றும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு எதிரான நாசவேலை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை ஐரோப்பாவில் நடந்த கலப்பினத் தாக்குதல்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கிரெம்ளின் மறுத்துள்ளதுடன், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளது.




