ஐரோப்பா

பிரித்தானியாவில் கடையை உடைத்து ATM கொள்ளை

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் மாவட்டம், டொடிங்டன் பகுதியில் உள்ள கடையொன்றிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம், M1 அதிவேக நெடுஞ்சாலையின் இணைப்பு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஹை ஸ்ட்ரீட்டிலுள்ள கடையொன்றை சேதப்படுத்தி அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூவர் ஏ.டி.எம். இயந்திரத்தை வெள்ளை நிற வேனில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் M1 நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதைக்குச் செல்லும் 12ஆவது சந்தியின் இணைப்பு வீதியில் வேனையும் இயந்திரத்தையும் கைவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில்  மஞ்சள் நிற அகழ்வு இயந்திரமொன்றும் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்