ஐரோப்பா

நேட்டோவின் பிளவு : போலந்து பிரதமர் எச்சரிக்கை!

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க அரசாங்கங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, நேட்டோ “தொடர்ச்சியான சிதைவை” சந்தித்து வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், அதிபர் ட்ரம்பிற்கும் ஜெர்மனியின் அதிபர் மெர்ஸிற்கும் ( Merz) இடையே ஏற்பட்ட இராஜதந்திர மோதல், நேட்டோவின் சரிவின் தொடக்கத்தைக் குறிப்பதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அட்லாண்டிக் கடந்த சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அதன் வெளிநாட்டு எதிரிகள் அல்ல, மாறாக நமது கூட்டணியின் தொடர்ச்சியான சிதைவுதான்.

இந்த பேரழிவுப் போக்கை மாற்றுவதற்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.” என அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெர்மனியில் இருந்து 5000 வீரர்களை திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் அறிவத்ததை தொடர்ந்து டஸ்கின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!