ஐரோப்பா

நேட்டோவை சோதிக்க போலந்தை குறிவைக்கும் ரஷ்யா

நேட்டோவின் உறுதியைச் சோதிக்கும் நோக்கில் ரஷ்யா போலந்து மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் போலந்தின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது அல்லது தரைவழி ஊடுருவல் கூட இடம்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோ நாடுகளுக்குள் பதற்றத்தை அதிகரிக்கவும், உக்ரைனுக்கு உதவுவதை தடுக்கவும்  ரஷ்யா இத்தகைய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எல்லைப் பகுதியில் ஒரு “கலப்பினத் தாக்குதல்” நடத்தப்படுவது தொடர்பில் ரஷ்யா பரிசீலித்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது விபத்து நடந்ததுபோல் சித்தரிக்கும் வடிவில் ரஷ்ய அல்லது பெலாரஸ் துருப்புகள் போலந்து எல்லைக்குள் நுழையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்