இந்தியா செய்தி

சீனா ஆதிக்கத்துக்கு சவால்; பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் ஏவுகணைகள்

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணைகளை விற்பனை செய்வது தொடர்பாக இந்தியா இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணைகளை விற்பனை செய்வது தொடர்பாக இந்தியா இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை விற்பனை ஒப்பந்தத்தின் கீழான விநியோகப் பணிகள் நிறைவடையும் நிலையில், புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 700 மில்லியன் முதல் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில், ஐந்து பிரமோஸ் ஏவுகணை கட்டமைப்புகளையும், மொத்தமாக சுமார் 60 ஏவுகணைகளையும் பிலிப்பைன்ஸ் கொள்வனவு செய்யவுள்ளதாக இந்தியத் தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடற்படைப் பயன்பாட்டுக்காக 375 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிரமோஸ் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்ய பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. புதிய ஒப்பந்தம் அதனைவிட அதிக பெறுமதியைக் கொண்டதாக அமையவுள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைகள், உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவற்றை தரை, கடல் மற்றும் வான் தளங்களில் இருந்து ஏவ முடியும்.

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது இராணுவ வலிமையையும் கடலோரப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் இந்தக் கொள்வனவில் ஆர்வம் காட்டி வருகிறது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரமோஸ் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதில் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அர்செனியோ அன்டோலோங் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புதன்கிழமை நடைபெற்ற டெல்லி பாதுகாப்பு கலந்துரையாடலில் இணையவழியாகப் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பர்டோ தியோடோரோ, மேலதிக பிரமோஸ் ஏவுகணைக் கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்ளத் தமது நாடு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஏற்கனவே இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், வியட்நாமுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடனும் இதன் விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 4.11 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி