இந்தியாவில் கோயில்களுக்குள் பூசாரிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்தியா செய்தி

கோயில் பூசகர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய அரசியலில் அடுத்த சர்ச்சை

  • November 3, 2026
  • 0 Comments

இந்தியாவில் கோயில்களுக்குள் பூசாரிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) செயற்பாட்டாளரான நேஹா போரா, பெண்களுக்குப் பாதுகாப்பு அவசியம் எனவும், பிராமணியக் கட்டமைப்பிலிருந்தே பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விலங்குகள் மற்றும் பெண்கள் அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட அமைப்பாக இந்தக் […]

இலங்கையில் கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கொத்துக் குண்டுகளுக்கு தடை

  • November 3, 2026
  • 0 Comments

இலங்கையில் கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொத்துக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கை என அழைக்கப்படும் கொத்துக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கையின் கீழான இலங்கையின் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவது தொடர்பில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் […]

இலங்கையின் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு 10 மில்லியன் யூரோ வழங்கும் EU – பின்னணி என்ன?

  • November 3, 2026
  • 0 Comments

இலங்கையின் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பசுமைப் பொருளாதார மாற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் மூலம் இலங்கையின் வர்த்தகத் துறை சார்ந்த நிறுவனங்களின் இயலளவை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத் தரநியமங்களுக்கு இணங்கிச் செயற்படுவதை ஊக்குவித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளை […]

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

பிணை கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்

  • November 3, 2026
  • 0 Comments

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு வழக்கில் பிணை பெறாத காரணத்தினால், நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், […]

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு, மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கொழும்பில் 21 வெளிநாட்டவர்கள் கைது: பின்னணி என்ன?

  • November 3, 2026
  • 0 Comments

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு, மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மருதானை தொழில்நுட்பச் சந்திக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் நேற்று (02) இரவு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகள், ஆறு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் உள்ளடங்குகின்றனர். சீனப் பிரஜைகளில் இரு […]

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்ற பொதியிலிருந்து 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. செய்தி

பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு

  • November 3, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்ற பொதியிலிருந்து 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (02) இரவு முன்னெடுக்கப்பட்ட வீதித் தடுப்பு நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிடுமாறு சமிக்ஞை செய்துள்ளனர். […]

இலங்கை செய்தி

குளிரைப் போக்க BBQ அடுப்பு: நுவரெலியாவில் தம்பதியினர் பலி

  • November 3, 2026
  • 0 Comments

நுவரெலியா, மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் பார்பிக்யூ (BBQ) அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அவிசாவளையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர், நுவரெலியா மீப்பிலிமன பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். விடுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிர் […]

இந்தியாவுடனான வர்த்தகம் கடந்த 2019ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சுமார் 3.3 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் – இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

இந்தியாவுடனான வர்த்தகம் துண்டிப்பு: பாகிஸ்தான் திண்டாட்டம்

  • November 3, 2026
  • 0 Comments

இந்தியாவுடனான வர்த்தகம் கடந்த 2019ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சுமார் 3.3 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் – இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட இந்திய மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியது. இதன் காரணமாக, சர்க்கரை, உரம், சீமெந்து, பெட்ரோலியப் பொருட்கள், […]

டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தால் வர்த்தகர்களுக்கு சுமார் 10,000 கோடி ரூபா ழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

போராட்டங்களால் டெல்லி வர்த்தகர்களுக்கு பொருளாதார இழப்பு

  • November 3, 2026
  • 0 Comments

டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தால் வர்த்தகர்களுக்கு சுமார் 10,000 கோடி ரூபா ழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி, நவம்பர் 1ஆம் திகதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது. தீபாவளிப் பண்டிகைக் கால வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் பேரணியை ஒத்திவைக்குமாறு வர்த்தகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், […]

உலகின் கடற்பரப்பில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் நிலையை மாற்றியமைக்கும் வகையில், சீனா தனது கடற்படையைப் பாரிய அளவில் விரிவுபடுத்தி வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முக்கிய செய்திகள்

உலகின் கடல் வல்லரசாக உருவெடுக்கும் சீனா: ஆட்டம் காணும் அமெரிக்கா

  • November 3, 2026
  • 0 Comments

உலகின் கடற்பரப்பில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவின் நிலையை மாற்றியமைக்கும் வகையில், சீனா தனது கடற்படையைப் பாரிய அளவில் விரிவுபடுத்தி வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. நவீன வரலாற்றில் அமைதிக் காலத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய கடற்படை விரிவாக்கத் திட்டங்களில் ஒன்றாக சீனாவின் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த விரிவாக்கத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, […]