இந்தியா செய்தி

இந்தியாவுடனான வர்த்தகம் துண்டிப்பு: பாகிஸ்தான் திண்டாட்டம்

இந்தியாவுடனான வர்த்தகம் கடந்த 2019ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சுமார் 3.3 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் – இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான வர்த்தகம் கடந்த 2019ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சுமார் 3.3 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் – இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட இந்திய மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியது.

இதன் காரணமாக, சர்க்கரை, உரம், சீமெந்து, பெட்ரோலியப் பொருட்கள், இரும்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தொலைதூர நாடுகளிலிருந்து அதிக செலவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளதாக நூர் முகமது தெரிவித்துள்ளார்.

இதனால் போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டணங்களும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவிலிருந்து நேரடியாக மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதன் மூலம், பாகிஸ்தானின் மருந்துத் துறைக்கு ஆண்டுதோறும் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு, கலாசாரம் மற்றும் குடும்ப உறவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இரு நாடுகளும் மீண்டும் வர்த்தக உறவுகளை ஆரம்பித்தால், இரு தரப்பு வர்த்தகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் நன்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி