” தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவே விலை உயர்வு”
“தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். விலைகுறைப்பை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்வோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “உலக சந்தையில் எண்ணெய் விலை உச்ச மட்டத்தில் காணப்படுகின்றது. கடந்த முறையும் இந்நிலைமையே காணப்பட்டது. ஆனால் அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் ஒரு தொகையை தாங்கிக்கொண்டே சிறு அளவில் அதிகரிப்பை மேற்கொண்டன. உலக அளவில் பிரச்சினை காணப்படுகின்றது. […]













