இலங்கை செய்தி

பிணை கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், மற்றொரு வழக்கில் பிணை பெறாத காரணத்தினால், நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

கொழும்பு கோட்டை, ட்ரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்துக்காக கிரிஷ் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு வசதியாக, 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது.

குறித்த காணி நிறுவனத்துக்கு மாற்றப்படுவதற்கு உதவியதற்குப் பிரதிபலனாக இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை