இந்தியா செய்தி

கோயில் பூசகர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய அரசியலில் அடுத்த சர்ச்சை

இந்தியாவில் கோயில்களுக்குள் பூசாரிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இந்தியாவில் கோயில்களுக்குள் பூசாரிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) செயற்பாட்டாளரான நேஹா போரா, பெண்களுக்குப் பாதுகாப்பு அவசியம் எனவும், பிராமணியக் கட்டமைப்பிலிருந்தே பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விலங்குகள் மற்றும் பெண்கள் அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட அமைப்பாக இந்தக் கட்டமைப்பு இருப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

பிராமணப் பெண்கள்கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாகவும், கோயில்களுக்குள் பூசாரிகளால் இத்தகைய குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தபோதே நேஹா போரா இந்தக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்துகள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் முந்தைய கருத்துகளை ஒத்திருப்பதாக பா.ஜ.க.வின் தேசியப் பேச்சாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து மதத்தையும் சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்தும் கருத்தியல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே நேஹா போராவின் கருத்துகள் அமைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் இடம்பெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பில் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளையும் பிரதீப் பண்டாரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், நேஹா போராவின் கருத்துகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றஞ்சாட்டும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றாலும், ஒரு சமூகத்தையே பெண்களுக்கு அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது ஏற்புடையதல்ல எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி