இலங்கையின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் தொடரும் கைது வேட்டை: நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது

  • November 10, 2026
  • 0 Comments

இலங்கையின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையுடன் தொடர்புடையதாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், அவர் கைது செய்யப்பட்டமைக்கான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான குவாண்டாஸ் (Qantas), தனது உள்நாட்டுக் கூட்டுத்தாபனப் பிரிவுகளில் பணியாற்றும் 850 ஊழியர்களின் வேலைகளை அவுட்சோர்சிங் முறையில் இந்தியாவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

AI ஆல் ஆஸ்திரேலியாவில் பறிபோகும் வேலை: இந்தியாவுக்கு வாய்ப்பு

  • November 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான குவாண்டாஸ் (Qantas), தனது உள்நாட்டுக் கூட்டுத்தாபனப் பிரிவுகளில் பணியாற்றும் 850 ஊழியர்களின் வேலைகளை அவுட்சோர்சிங் முறையில் இந்தியாவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், குவாண்டாஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி வனேசா ஹட்சன், இந்தத் தீர்மானம் சில ஊழியர்களுக்கு வேதனையையும் […]

மேற்கு பசிபிக் கடற்பரப்பில், தனது விமானம் தாங்கிக் கப்பலான 'லியோனிங்' மற்றும் ஏனைய கடற்படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் படைகளின் தலையீட்டைத் தடுக்கும் இராணுவப் பயிற்சிகளைச் சீனா முன்னெடுத்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ Wellington Koo தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம்: சீனாவின் நகர்வு குறித்து தைவான் கழுகுப்பார்வை

  • November 10, 2026
  • 0 Comments

மேற்கு பசிபிக் கடற்பரப்பில், தனது விமானம் தாங்கிக் கப்பலான ‘லியோனிங்’ மற்றும் ஏனைய கடற்படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் படைகளின் தலையீட்டைத் தடுக்கும் இராணுவப் பயிற்சிகளைச் சீனா முன்னெடுத்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ Wellington Koo தெரிவித்துள்ளார். தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அண்மைக்காலமாக தைவானைச் சுற்றியுள்ள வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் தனது போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அதிகளவில் அனுப்பி வருகிறது. கடந்த வாரம், தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பு, […]

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் சீன வர்த்தகப் பெண்ணுடன் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட உறவு குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI விசாரணை நடத்தி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன உளவாளியுடன் தொடர்பா? FBI விசாரணைக்குள் Nvidia தலைவர்

  • November 10, 2026
  • 0 Comments

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் சீன வர்த்தகப் பெண்ணுடன் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட உறவு குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI விசாரணை நடத்தி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், இந்தக் குற்றச்சாட்டுகள் தமக்கு ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டார். னக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான ஜென்சன் ஹுவாங்குடன் தாம் பேசியதாகவும், குறித்த பெண் சீன உளவாளி என்பது தமக்குத் […]

அநுராதபுரம், மதவாச்சி - ரம்பேவ பகுதியில் A -9 வீதியில் இன்று முற்பகல் இடமபெற்ற கோர வாகன விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் A -9 வீதியில் கோர விபத்து: ஐவர் பலி -பலர் காயம்

  • November 10, 2026
  • 0 Comments

அநுராதபுரம், மதவாச்சி – ரம்பேவ பகுதியில் A -9 வீதியில் இன்று முற்பகல் இடமபெற்ற கோர வாகன விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. மூன்று பஸ்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இரு இபோச பஸ்களும், தனியார் பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மெதவாச்சி, அநுராதபுரம் உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்தில் 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா செய்தி

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மணிப்பூர் செல்கிறார் இந்திய எதிர்க்கட்சி தலைவர்

  • November 10, 2026
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே 2023ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி வெடித்த இனக்கலவரம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், சுமார் 7,900 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 2,600க்கும் மேற்பட்ட […]

உக்ரைன் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா தீவிரம்

  • November 10, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் திங்கட்கிழமை தொலைபேசியில் உரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், போரின் தற்போதைய நிலவரம், அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். அதேவேளை, அபுதாபியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் குறித்து மோடியிடம் விளக்கியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், […]

கொழும்பு துறைமுக நகரில் சீனா உருவாக்கிய தானியங்கி பயணிகள் விமானத்தின் (ட்ரோன்) வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பு குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: சீனா மகிழ்ச்சி

  • November 10, 2026
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகரில் சீனா உருவாக்கிய தானியங்கி பயணிகள் விமானத்தின் (ட்ரோன்) வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பு குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இலங்கையின் சுற்றுலா, இணைப்பு மற்றும் நகரப் போக்குவரத்திற்கு ஒரு சாத்தியமான புதிய வழியாக அமையும் என்றும் அது கூறியுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், EH216-S தானியங்கி வான்வழி வாகனம் துறைமுக நகரில் ஒரு வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பை நிறைவு செய்துள்ளதாகவும், இந்த வளர்ச்சியானது […]

இலங்கையில் காலதாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை மிகவும் விரைவாக நடத்த வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இந்தியா இலங்கை செய்தி

‘மாகாணசபைத் தேர்தல்’ – கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கிறது டெல்லி

  • November 10, 2026
  • 0 Comments

இலங்கையில் காலதாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை மிகவும் விரைவாக நடத்த வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “இலங்கையின் உள்நாட்டு அரசியலில் நடக்கும் விடயங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க முடியாது. இருப்பினும், நாங்கள் எப்போதும் இலங்கை அரசைக் […]

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் நவம்பர் 08 வரையான காலப்பகுதிக்குள் 19 லட்சத்து 12 ஆயிரத்து 233 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சுற்றுலாத்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடைந்ததா இலங்கை?

  • November 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் நவம்பர் 08 வரையான காலப்பகுதிக்குள் 19 லட்சத்து 12 ஆயிரத்து 233 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 லட்சத்து 12 ஆயிரத்து26பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 670 பேரும் , சீனாவில் இருந்து ஒரு லட்சத்து26 ஆயிரத்து 326 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஒரு லட்சத்து […]