இலங்கை செய்தி

சொல்லிசை பாடகரை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!

  • June 6, 2026
  • 0 Comments

சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த இச் சம்பவத்திற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப செயல்படுகிறது NPP அரசு! கூட்டு எதிரணி குற்றச்சாட்டு!

  • June 6, 2026
  • 0 Comments

“ வாக்களித்த மக்கள் பற்றி சிந்திக்காது, டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே என்பிபி அரசாங்கம் செயல்படுகின்றது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு ஜனநாயக வழியில் கூட்டு எதிரணி போராடும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும், அரசியல் செயற்பட்டாளருமான சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே நாட்டு […]

உலகம் கல்வி

வட்டி வீத அதிகரிப்பு அச்சம்: சரிந்தது சர்வதேச பங்குச்சந்தை!

  • June 6, 2026
  • 0 Comments

அமெரிக்க Federal Reserve வட்டி வீதங்களை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட Nasdaq குறியீடு, 2025 ஏப்ரலுக்குப் பிறகான தனது மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பாராத அளவிற்கு வலுவாக வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்த வருடத்தின் பங்குச்சந்தை லாபங்கள் நீடிக்காது என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் […]

இலங்கை செய்தி

3,000 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தவர் காலியில் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

காலி பகுதியில் சட்டவிரோத போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து சுமார் 3,000 போதை மாத்திரைகளும், 125,000 பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான நபர் ஒரு தனியார் மருந்தகத்தில் பணியாற்றுபவர் என்பது கண்டறியப்பட்டது. ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த […]

இலங்கை செய்தி

36 ஆண்டுகால அகதி வாழ்வுக்கு விடிவு எப்போது?தொடரும் போராட்டம்!

  • June 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி நேற்று ஏழாவது வெள்ளிக்கிழமையாகவும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாகத் தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அன்று முதல் இன்று வரை […]

செய்தி

செம்மணியில் மேலும் 13 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை 3 சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மொத்தம் 13 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து சிறுவர்களுடைய மூன்று […]

ஐரோப்பா செய்தி

இஸ்ரேலின் இரு அமைச்சர்களுக்கு பயணத்தடை விதித்தது அயர்லாந்து!

  • June 5, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் முக்கிய இரு அமைச்சர்கள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அயர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. அமைச்சர்களான Itamar Ben-Gvi மற்றும் Bezalel Smotrich ஆகியோருக்கே இவ்வாறு நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இவர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளே இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று அயர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாலஸ்தீனியர்களை முற்றிலும் வெளியேற்ற முற்படும் இவர்களின் இனப்படுகொலை நோக்கம் கொண்ட கருத்துகளை அயர்லாந்து வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே பல நாடுகள் இந்த […]

ஐரோப்பா கல்வி

பாலஸ்தீன கொடியை அகற்ற ஸ்லோவேனியாவின் புதிய பிரதமர் உத்தரவு!

  • June 5, 2026
  • 0 Comments

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் புதிய வலதுசாரி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன், அந்நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது முன்னாள் பிரதமர் Robert Golob பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அந்நாட்டின் கொடியை ஏற்றியிருந்த நிலையில், புதிய பிரதமர் Janez Jansa அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளார். காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஸ்லோவேனியா நாட்டின் முந்தைய அரசு கடுமையாக விமர்சித்து ஆயுதத் தடையையும் விதித்திருந்தது. ஆனால் புதிய பிரதமர் அந்த முடிவுகளை தலைகீழாக மாற்றத் திட்டமிட்டுள்ளார். இந்த அரசியல் […]

உலகம் செய்தி

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் தகவல்!

  • June 5, 2026
  • 0 Comments

இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதித்தது. எனினும், அமெரிக்கா பதிலுக்கு எதையும் செய்யவில்லை. நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் தற்போது அமெரிக்கா அதிக பணம் சம்பாதிக்கின்றது. இந்தியாவுடன் ஓர் […]

இலங்கை செய்தி

86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைக்குள், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியமான சமூகம் மற்றும் சமநிலையான சூழலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வளர்ச்சிப் கட்டமைப்பிற்குள் […]