இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்து!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை மீண்டுமொரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டத்தின் பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் […]

இலங்கை

அவதானம்: மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • May 22, 2026
  • 0 Comments

பலத்த மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் சடலம் எங்கே? 17 வருடங்களுக்கு பிறகு பொன்சேகா வெளியிட்ட பகீர் தகவல்!

  • May 22, 2026
  • 0 Comments

” பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும். நினைவகம் அமைக்க முற்படக்கூடும்.” இவ்வாறு இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பொன்சேகா மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டார். “போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் நீங்கள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி […]

இலங்கை செய்தி வணிகம்

ஆட்டம் காணும் இலங்கை ரூபா: எகிறும் டொலர் பெறுமதி!

  • May 21, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த சில நாட்களாக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என எதிரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 342.63 ரூபாவாகவும் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று […]

இலங்கை செய்தி

“இஸ்ரேல் பிடியில் சிக்கியுள்ள இலங்கை பெண்ணை மீட்கவும்”

  • May 21, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில் கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது: காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை இஸ்ரேல் கைப்பற்றி, சர்வதேச […]

இலங்கை செய்தி

“போராட்டம் வெடிக்க முன் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கவும்” திகா எம்.பி. வலியுறுத்து

  • May 21, 2026
  • 0 Comments

“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார். மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தி ராதாகிருஷ்ணன் எம்.பியால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு , “மலையக மக்களின் காணி பிரச்சினையென்பது நெடுநாள் […]

இலங்கை ஐரோப்பா செய்தி

கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பிரிட்டன் ஆராய்வு!

  • May 21, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் ( Bridget Phillipson) சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர். அத்தோடு, இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, மாணவர் பரிமாற்றம் (Student mobility), […]

இலங்கை செய்தி

சீதனக் கொடுமை: யாழில் இளம் பெண் உயிர்மாய்ப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண், இளைஞர் ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார். எனினும், இவர்களது திருமணத்தைக் கணவனின் தாயார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. திருமணத்தின் பின்னர், 25 பவுண் […]

இலங்கை செய்தி

யாழில் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணம் – பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தண்டனைக்குள்ளானவராவார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில், மேற்படி பெண் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்போது அவரது உடைமையிலிருந்து 1 கிராம் 475 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு […]

இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கையின் நல்லிணக்க முயற்சி குறித்து பிரிட்டனுக்கு பிரதமர் விளக்கம்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper ஐ சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, டித்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக பிரிட்டன் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்பையும் பிரதமர் பாராட்டினார். இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, […]