உக்ரைன் மீதான படையெடுப்பு – 490,334 வீரர்களை இழந்த ரஷ்யா
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து குறைந்தது 490,334 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட 65 சதவீதமான வீரர்கள் மரணத்தை தழுவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புள்ளிவிவர நிறுவனம் அண்மையில் இணையவழித் தாக்குதலை எதிர்கொண்டதாக அறிவித்துள்ள நிலையில், இந்த புள்ளிவிபர தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய ரஷ்யா 2021 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலப்பகுதியில் 11 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருதிய இந்தபோர் 05 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் ரஷ்ய மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளதை இந்த புள்ளிவிபர தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.




