இந்தியா

பாகிஸ்தானின் தொடருக்கு தடை விதிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை

இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸில் ஒளிபரப்பாகும் பாகிஸ்தானின் தொடர் ஒன்றுக்கு முழுமையாக தடை விதிக்குமாறு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA), பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

​​’ஜோ பச்சே ஹைன் சங் சமைத் லோ’ ‘Jo Bachay Hain Sang Samait Lo என்ற தொடரையே தடை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடர் வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தானியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்கள் இந்தியத் திரைகளில் தோன்றுவதற்கு நீண்டகால சட்டப்பூர்வத் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடிதத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவ் அமைப்பு, பொழுதுபோக்கை விட தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் இடைத்தரகர்கள் பாகிஸ்தானிய உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மே 8, 2025 வெளியிட்ட அறிவிப்பையும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த  தொடரில் ஃபவாத் கான் மற்றும் மஹிரா கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எழுத்தாளர் ஃபர்ஹத் இஷ்தியாக் Farhat Ishtiaq எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று தலைமுறைகளாகப் பரவியுள்ள பல காதல் கதைகளை  இந்த தொடர் எடுத்துரைக்கிறது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே