உலகம் செய்தி

‘அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது’- ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

“ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர்.

மக்களோ, ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.” எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாது என்பதே அது.

எனவே, அமெரிக்கா ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டும்” எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி