செய்தி விளையாட்டு

2030 உலகக்கிண்ணம்: இறுதிப் போட்டிக்காக ஸ்பெயின், மொராக்காவுக்கிடையே கடும் போட்டி

2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியை நடத்துவதற்கான போட்டி ஸ்பெயினுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் தீவிரமடைந்துள்ளது.

2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியை நடத்துவதற்கான போட்டி ஸ்பெயினுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் தீவிரமடைந்துள்ளது.

ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து 2030 உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானபோது, இறுதிப் போட்டி ஸ்பெயினில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு கால்பந்தாட்ட அதிகாரிகளிடையே நிலவியது.

எனினும், தற்போது மொராக்கோவும் இறுதிப் போட்டியைத் தனது நாட்டில் நடத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் ஸ்பெயினின் ஆரம்பகட்ட நம்பிக்கை குறைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் போட்டி தற்போது ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கழகத்தின் சாண்டியாகோ பெர்னபியூ மைதானம், பார்சிலோனாவின் புனரமைக்கப்பட்ட கம்ப் நௌ மைதானம் மற்றும் மொராக்கோவின் காசாபிளாங்கா நகருக்கு அருகில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஹசன் II மைதானம் ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளது.

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஹசன் II மைதானம், 115,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கால்பந்தாட்ட மைதானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், ஸ்பெயினில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் மட்ரிட் மற்றும் பார்சிலோனா ஆகிய நகரங்களுக்கு இடையிலான போட்டியும் சவாலாக மாறியுள்ளது. இரு நகரங்களும் தமது மைதானங்களில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

மொராக்கோ தனது முயற்சியில் அரசாங்கம் மற்றும் கால்பந்தாட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைந்த ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், ஸ்பெயினின் முயற்சியில் உள்நாட்டு அரசியல் மற்றும் கால்பந்தாட்ட நிர்வாகம் தொடர்பான சிக்கல்களும் தாக்கம் செலுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவுக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பான UEFA-வுக்கும் இடையிலான முரண்பாடுகளும் இந்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

இறுதிப் போட்டி நடைபெறும் மைதானம் தொடர்பில் FIFA இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை. போட்டியை நடத்துவதற்கான நகரங்கள், நாடுகள் மற்றும் அரசாங்கங்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என FIFA தெரிவித்துள்ளது.

2030 உலகக் கிண்ண இறுதிப் போட்டியை ஆபிரிக்காவில் நடத்துவது அந்தக் கண்டத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என மொராக்கோ தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி