கோட்டாபயவின் பயணத் தடையை நீக்க கோரிக்கை -நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்தது.
முன்னாள் ஜனாதிபதி தனது வழக்கறிஞர்கள் மூலம் சமர்ப்பித்த கோரிக்கை தொடர்பான உத்தரவை அறிவிக்கும்போது நீதவான் இந்த முடிவை எடுத்தார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தகவல்களை மறைத்ததாகவும், அது தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ மீது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில், முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உட்பட மூன்று சந்தேக நபர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




