உலகம் செய்தி

போராட்டத்துக்கு பணிந்தது பங்களாதேஷ் அரசு: குறைந்தபட்ச ஊதியம் 36 சதவீதத்தால் அதிகரிப்பு

பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் 36 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு 17,000 டாக்காவாக (சுமார் 136 அமெரிக்க டொலர்கள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் 36 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு 17,000 டாக்காவாக (சுமார் 136 அமெரிக்க டொலர்கள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பல வார காலப் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 12,500 டாக்காவாக இருந்த குறைந்தபட்ச ஊதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஊதிய நிர்ணயச் சபையின் ஆறு உறுப்பினர்களில் நால்வர் 17,000 டாக்காவை நிர்ணயிக்க ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஏனைய இருவர் 18,000 டாக்காவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, ஏனைய பிரிவு ஆடைத் தொழிலாளர்களுக்கான ஊதியங்களும் திருத்தப்பட்டுள்ளன. எனினும், அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய உயர்வைத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பங்களாதேஷின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 80 சதவீதத்தை ஆடைத் தொழில்துறை பெற்றுக்கொடுக்கிறது. இத்துறையில் சுமார் 40 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களாவர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி