உலகம்

அமெரிக்க முற்றுகை குறித்து கவலையில்லை – ஈரான் துணை ஜனாதிபதி

ஹோர்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகை தொடர்பில் கவலைப்படவில்லை என ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது ரெசா அரெஃப் Mohammad Reza Aref இன்று தெரிவித்துள்ளார்.

மற்ற எல்லைகள் வழியாக சரக்குகளின் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், இது தொடர்பில் கவலைப்படவில்லை என்றும், தற்போது பொருளாதார நிலை தொடர்பிலேயே கவலைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் கையிருப்பு வலுவாகவும், விநியோகம் ஏராளமாகவும் உள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஈரான் போரினால் தூண்டப்பட்டு, பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான பணவீக்க எழுச்சிகளில் ஒன்றை தெஹ்ரான் எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா ஜூலை மாதம் ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை மீண்டும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்