தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட உணவகத்துக்கு அப்போதைய காதலியுடன் சென்ற அனுபவத்தையும், அந்தக் காதலி தற்போது தனது தோழியாக இருப்பதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். இந்தியா செய்தி

முன்னாள் காதலி குறித்து மனம் திறந்தார் ராகுல்காந்தி

  • November 18, 2026
  • 0 Comments

தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட உணவகத்துக்கு அப்போதைய காதலியுடன் சென்ற அனுபவத்தையும், அந்தக் காதலி தற்போது தனது தோழியாக இருப்பதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். தனது தாயார் சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய ‘Belonging: A Journey of Love’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். தனது பெற்றோரான ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள ‘Varsity’ உணவகத்தில் முதன்முதலில் சந்தித்துக் […]

இந்தியாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறைமை தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தியா செய்தி

சர்ச்சையைக் கிளப்பிய அமெரிக்க உரை: ராகுல்காந்திமீது பாஜக பாய்ச்சல்

  • November 18, 2026
  • 0 Comments

இந்தியாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி முறைமை தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிப்பதாகவும், நாட்டில் பரவலான வேலைவாய்ப்பின்மை நிலவுவதாகவும், கல்வி முறைமையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜகவின் தேசியப் பேச்சாளர் கௌரவ் பாட்டியா, வெளிநாட்டில் வைத்து […]

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேத்தரின் ஆகியோர் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள சாணக்கியா கைவினைப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்தியா செய்தி

இந்தியக் கைவினைக் கலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் தேடித்தந்த இளவரசர் வில்லியம் தம்பதியினர்

  • November 18, 2026
  • 0 Comments

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேத்தரின் ஆகியோர் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள சாணக்கியா கைவினைப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தின் இறுதி நாளான இன்று (18), மும்பையின் லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள சாணக்கியா கைவினைப் பயிற்சிப் பாடசாலைக்கு அரச தம்பதியினர் சென்றுள்ளனர். பாரம்பரிய கைவினைக் கலைகளைப் பாதுகாப்பதுடன், நிலையான ஆடை மற்றும் துணி உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகளைப் பார்வையிடுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக […]

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் இராணுவப் போக்குவரத்து விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 19 பேர் பலி

  • November 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் இராணுவப் போக்குவரத்து விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, An-12 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், கெமரோவோ (Kemerovo) பிராந்தியத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை வழக்கமான விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. […]

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பச் சேவைத் தடைகளுக்கும், சைபர் தாக்குதலுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காமீது சைபர் போர் தொடுப்பா? தொழில்நுட்ப முடக்கத்தின் பின்னணி என்ன?

  • November 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பச் சேவைத் தடைகளுக்கும், சைபர் தாக்குதலுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சதிச்செயலாக இருக்கலாம் என இணையத்தில் பரவலாக எழுந்துவரும் சந்தேகங்களை அவர் நிராகரித்துள்ளார். இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அனைத்து விமானப் பயணங்களும் […]

கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானத்தை வழங்கிப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 19 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் வழங்கி வன்கொடுமை: கிளிநொச்சியில் கொடூரம்

  • November 18, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானத்தை வழங்கிப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 19 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி – திருவையாற்றுப் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சமயத்தில், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்றே இந்த வன்கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில் விசா அலுவலகம் ஒன்றை நடத்திவரும் இளைஞர் ஒருவரே சிறுமியை இவ்வாறு அழைத்துச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் […]

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாமல் ராஜபக்ச உருக்கமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கை செய்தி

சிறைச்சாலையின் சுவர்களாலும் எங்கள் பாசத்தை பிரிக்க முடியாது: தந்தைக்கு நாமல் உருக்கமான வாழ்த்து

  • November 18, 2026
  • 0 Comments

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாமல் ராஜபக்ச உருக்கமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்து தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியாத கடினமான சூழ்நிலையில் இருந்தாலும், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பாலும் தந்தையின் மீதான தனது அன்பும் மரியாதையும் அளவற்றதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத சவால்களை எதிர்கொள்ளும்போது, பெற்றோரிடமிருந்து கிடைத்த அன்பு, முன்மாதிரி மற்றும் வாழ்க்கைப் பாடங்களே எமக்கு […]

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், மேற்படி இளைஞர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

பொலிஸாரைக் கண்டதும் இளைஞன் செய்த செயல்: யாழில் பயங்கரம்

  • November 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், மேற்படி இளைஞர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை அழைத்துவர நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். இதன்போது பொலிஸாரைக் கண்ட அந்த இளைஞர், வீட்டின் ஜன்னலை […]

மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் மூன்று தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புகள் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறை: இஸ்ரேலிய அமைப்புகள் மீது ஆஸ்திரேலியா தடை

  • November 18, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் மூன்று தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புகள் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளார். இந்தத் தடைகளின் கீழ், குறித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆஸ்திரேலியப் பிரஜைகள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், அவர்களுக்கு நிதி அல்லது ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டவர்களில், […]

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதுடன், முதலீடுகளுக்கான தடைகளையும் நீக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் சீன விஜயத்திற்கு முன்னதாக ஷி ஜின்பிங் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

  • November 18, 2026
  • 0 Comments

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதுடன், முதலீடுகளுக்கான தடைகளையும் நீக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் தென்பகுதி தொழில்நுட்ப மையமான ஷென்சென் நகரில் இன்று (18) ஆரம்பமான ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டின் ஆரம்ப உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பை (WTO) மையமாகக் கொண்ட, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்பை உறுதியாகப் பேண […]