இந்தியா செய்தி

முன்னாள் காதலி குறித்து மனம் திறந்தார் ராகுல்காந்தி

தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட உணவகத்துக்கு அப்போதைய காதலியுடன் சென்ற அனுபவத்தையும், அந்தக் காதலி தற்போது தனது தோழியாக இருப்பதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

தனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட உணவகத்துக்கு அப்போதைய காதலியுடன் சென்ற அனுபவத்தையும், அந்தக் காதலி தற்போது தனது தோழியாக இருப்பதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

தனது தாயார் சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய ‘Belonging: A Journey of Love’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தனது பெற்றோரான ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள ‘Varsity’ உணவகத்தில் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தை நினைவுகூர்ந்த ராகுல், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தானும் அந்த உணவகத்துக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.

அப்போது தனது காதலியிடம், “நாம் வார்​சிட்டி உணவகத்துக்குச் செல்லலாம். எனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்த இடத்தைப் பார்க்க வேண்டும்” என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இருவரும் உணவகத்துக்குச் சென்று அமர்ந்ததும், ஊழியர்கள் உணவுப் பட்டியலைக் கொண்டு வந்துள்ளனர். அப்போது தனது பெற்றோர் அந்த உணவகத்தில்தான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த உணவக ஊழியர், “ஓ! அவர்களையா? எனக்கு அவர்களைத் தெரியும்” என்று பதிலளித்தாராம்.

இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த ராகுல் காந்தி, அப்போது தன்னுடன் வந்த காதலி தற்போது தனது தோழியாகிவிட்டார் என்று நகைச்சுவை கலந்த புன்னகையுடன் குறிப்பிட்டார்.

தாயின் மன உறுதியைப் பாராட்டிய ராகுல்

இதன்போது தனது தாயார் சோனியா காந்தியின் வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்தும் ராகுல் மனம் திறந்து பேசினார்.

தனது தாயார் இரண்டு அல்லது மூன்று முறை புற்றுநோயிலிருந்து மீண்டதாகப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் அவர் நான்கு முறை புற்றுநோயிலிருந்து மீண்டவர் என்று ராகுல் தெரிவித்தார்.

“எனது வாழ்க்கையில் ஒருமுறைகூட அவர் பயந்ததை நான் பார்த்ததில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர் பின்வாங்கியதையும் நான் கண்டதில்லை” என்று தாயாரின் மன உறுதியைப் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், தனது தந்தை ராஜீவ் காந்தி சோனியா காந்தி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட ராகுல், அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், சோனியா காந்தியை நினைத்து எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார் என்றும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.

காதல், குடும்ப நினைவுகள், தாயின் மன உறுதி எனப் பல உணர்வுகளை உள்ளடக்கிய ராகுல் காந்தியின் இந்த உரை நிகழ்வில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி