கட்சி பெயர், சின்னம் முடக்கம்: சட்டப் போராட்டத்தில் இறங்கினார் மம்தா
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் ‘புல்வெளியில் இரட்டை மலர்கள்’ சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலிக்கும்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்று மம்தா பாஜர்ஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆவணங்கள் […]













