உலகம் செய்தி

சீனாவில் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – முதியோர், குழந்தைகளை சமாளிக்க திண்டாட்டம்

சீனாவில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதங்களுக்கு ஏற்ப, 2030-ஆம் ஆண்டுக்குள் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம்  தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கமைய இன்றைய தினம் புதிய செயல்திட்டம் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

திட்டத்தின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள், முதியோர் பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள மொத்த படுக்கைகளில் 73 சதவீதம் செவிலியர் பராமரிப்பு படுக்கைகளாக இருக்கும் என்றும்,  முதியோருக்கான சமூகப் பராமரிப்பு வசதிகளின் எண்ணிக்கை 70 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 2,000 பழமையான பொது செவிலியர் இல்லங்கள் புதுப்பிக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குழந்தை பராமரிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, அனைத்து மாகாண அளவிலான நகரங்களிலும் குழந்தை பராமரிப்பு சேவை மையங்களை விரிவுபடுத்தவும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேர்க்கை விகிதத்தை  6 சதவீதப் புள்ளிகள் உயர்த்தவும் அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்.

அத்துடன் 2 முதல் 3 வயது வரையிலான மழலையர் பாடசாலைகளை புதுப்பிக்க அல்லது விரிவாக்கவும்  இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.

மேலும் பணியிடங்களில் குழந்தை பராமரிப்பு சேவைகளை வழங்க முதலாளிகள் தங்கள் சொந்த வளாகங்களைப் பயன்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது.

இதேவேளை திருமணம் மற்றும் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக, சீன அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் குடும்ப மானியங்கள், குழந்தை பராமரிப்பு ஆதரவு மற்றும் பிரசவம் தொடர்பான மருத்துவச் செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இந்த திட்டங்களை கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி