இந்தியா செய்தி

இந்தியக் கைவினைக் கலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் தேடித்தந்த இளவரசர் வில்லியம் தம்பதியினர்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேத்தரின் ஆகியோர் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள சாணக்கியா கைவினைப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேத்தரின் ஆகியோர் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள சாணக்கியா கைவினைப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தின் இறுதி நாளான இன்று (18), மும்பையின் லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள சாணக்கியா கைவினைப் பயிற்சிப் பாடசாலைக்கு அரச தம்பதியினர் சென்றுள்ளனர்.

பாரம்பரிய கைவினைக் கலைகளைப் பாதுகாப்பதுடன், நிலையான ஆடை மற்றும் துணி உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகளைப் பார்வையிடுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய நெசவு மற்றும் கைவினைத் தொழில்நுட்பங்களைப் பாதுகாத்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் இந்தப் பயிற்சி நிலையம் முக்கிய பங்காற்றி வருகின்றது.

குறிப்பாக, பெண்களுக்கு பாரம்பரிய கைத்தையல் மற்றும் துணி அலங்காரக் கலைகளில் பயிற்சியளித்து, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதன்போது, பாரம்பரிய கைவினைத் திறன்கள் எவ்வாறு நிலையான ஆடை உற்பத்திக்கு உதவுகின்றன என்பது தொடர்பில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோர் விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விஜயம், பாரம்பரிய கலைகள், கலாசார மரபுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சர்வதேச அளவில் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இதேவேளை, இளவரசர் வில்லியம் 2020ஆம் ஆண்டு ஆரம்பித்த ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) விருது வழங்கும் நிகழ்வு நேற்று (17) மும்பையில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் உலகளாவிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவுக்கான தற்போதைய விஜயம், 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் இணைந்து மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாகும்.

இந்திய விஜயத்தின் போது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வீதி கிரிக்கெட்டில் பங்கேற்றமை, மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்தமை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் அரச தம்பதியினர் கலந்துகொண்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி