உலகம் செய்தி

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 19 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் இராணுவப் போக்குவரத்து விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் இராணுவப் போக்குவரத்து விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, An-12 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், கெமரோவோ (Kemerovo) பிராந்தியத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வழக்கமான விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாகுனோவோ (Yagunovo) கிராமத்திற்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவசரகால மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பிராந்திய ஆளுநர் இல்யா செரெடியுக் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து இடம்பெற்ற பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஆளுநர், மேலதிக அவசரத் தேவைகளுக்காக ஹெலிகொப்டர் மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே தற்போதைய முக்கிய பணியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி