நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினங்கள் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய அரசு சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளின் கன்னத்தில் அறைந்தால் போல் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார். இலங்கை செய்தி

எரிபொருள் விலையேற்றம்: அரசுமீது எதிர்க்கட்சி தலைவர் விமர்சனக் கணை தொடுப்பு

  • October 1, 2026
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினங்கள் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய அரசு சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளின் கன்னத்தில் அறைந்தால் போல் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார். இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றவும், நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறவும் தற்போதைய அரசின் பிரதிநிதிகள், துறைமுகத்தில் இறக்கப்படும் […]

இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' விருது வழங்கிகௌரவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இந்தியா செய்தி

174 பேரின் உயிரைக் காத்த விமானி ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருது

  • October 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, ‘விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்’ விருது வழங்கிகௌரவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ” இஸ்ரேல் நோக்கிச் சென்ற ப்ளை துபாய் விமானத்தின் விமானியான ஸ்மித் மச்சாரின் துணிச்சல் இன்று உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் […]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினரை இன்று காலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா இலங்கை செய்தி

கொழும்பு, டெல்லி உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்

  • October 1, 2026
  • 0 Comments

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினரை இன்று காலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ரில்வின் சில்வாவுடனான உரையாடலுக்கு சந்திப்புக்கு பிறகு, எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அவரையும் இலங்கை பிரதிநிதிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். “நமது இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நல்லதொரு கலந்துரையாடல் நடைபெற்றது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நம்பிக்கையான கூட்டாளி என்ற […]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தம்மை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரீட் மனுவைச் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இலங்கை செய்தி

கைது செய்யப்படுவதை தடுக்கும் கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு

  • October 1, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தம்மை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரீட் மனுவைச் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் […]

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சக மாணவியைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பை (Christa Pike), டென்னசி (Tennessee) மாநிலத்தின் ஊசி மூலம் விஷம் செலுத்தும் மரண தண்டனை முயற்சியில் இருந்து புதன்கிழமை இரவு உயிர் தப்பியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

விஷம் செலுத்தியும் ஓயாத மூச்சு: மரண தண்டனையை வென்ற கைதி

  • October 1, 2026
  • 0 Comments

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சக மாணவியைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பை (Christa Pike), டென்னசி (Tennessee) மாநிலத்தின் ஊசி மூலம் விஷம் செலுத்தும் மரண தண்டனை முயற்சியில் இருந்து புதன்கிழமை இரவு உயிர் தப்பியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நூற்றாண்டுகளில் பெண் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அம்மாநிலம் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. நாஷ்விலில் உள்ள ரிவர்பெண்ட் பாதுகாப்புச் சிறையிலிருந்து (Riverbend Maximum Security Institution) […]

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை செய்தி

நயினாதீவு அம்மனை வழிபட இந்திய யாத்திரிகள் யாழ். வருகை

  • October 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் கப்பல் சேவையின் ஊடாக, 86 யாத்திரிகர்கள் அடங்கிய குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். மதீஸ்வரி அம்மன் ஆலயப் பிரதம குரு மற்றும் ‘வஜீஸ்வரிமாதா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த ஆன்மீக யாத்திரிகர்கள் குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தரிசனத்துக்காக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆனந்த விஜேபால தெரிவித்தார். இலங்கை செய்தி

இலங்கை காவல்துறைக்கு புதிய ஆடையை அறிமுகப் படுத்துவது குறித்து ஆராய்வு?

  • October 1, 2026
  • 0 Comments

இலங்கை காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆனந்த விஜேபால தெரிவித்தார். இலங்கை காவல்துறை புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்தும், அதன் ஒரு பகுதியாக உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவியை சேர்ப்பதற்கான பரிந்துரைகளையும் ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஐந்து வகையான சீருடைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “முதல் தொகுதி , இரண்டாவது […]

ஜப்பானின் கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (01) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதிப் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. செய்தி விளையாட்டு

இலங்கை படுதோல்வி: இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

  • October 1, 2026
  • 0 Comments

ஜப்பானின் கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (01) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதிப் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு , இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆரம்பத்திலேயே கடும் நெருக்கடி அளித்தார். தனது முதல் ஓவரிலேயே சினேத் ஜயவர்தன மற்றும் சோஹான் டி லிவேரா ஆகிய இருவரையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் […]

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA) தலைவர் தேர்தலில், தற்போதைய தலைவர் ஜியானி இன்பான்டினோவிற்கு (Gianni Infantino) வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சுவிட்சர்லாந்து கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கான ஆதரவை மீளப்பெற்றது சுவிஸ் கால்பந்து சங்கம்

  • October 1, 2026
  • 0 Comments

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA) தலைவர் தேர்தலில், தற்போதைய தலைவர் ஜியானி இன்பான்டினோவிற்கு (Gianni Infantino) வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சுவிட்சர்லாந்து கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது. உலகக்கோப்பை மற்றும் கிளப் உலகக்கோப்பை உள்ளிட்ட FIFA போட்டிகளின் பங்குகளைத் தனிப்பார்வை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய ஜூலை மாதத்தில் இன்பான்டினோ முன்மொழிந்த திட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல முன்னணி ஐரோப்பிய தேசிய சங்கங்கள் அவருக்கு அளித்து வந்த […]

சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் (Xi Jinping) கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சீன ஜனாதிபதியுடன் ட்ரம்ப் பேச்சு

  • October 1, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் (Xi Jinping) கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மியான்மர் ஆய்வாளரும் அமெரிக்கக் குடிமகனுமான மின் ஜின் (Min Zin) மற்றும் ஹாங்காங்கின் முன்னணி ஊடக அதிபரும் சீன விமர்சகருமான ஜிம்மி லாய் (Jimmy Lai) போன்ற அரசியல் கைதிகளின் விவகாரங்கள் குறித்துப் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆம், […]