இலங்கை செய்தி

வருங்கால மனைவியுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி கண்டியில் கைது

கண்டி நகரில் பொலிஸ் சீருடை அணிந்து, முழுத் தாடியுடன் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நகரில் பொலிஸ் சீருடை அணிந்து, முழுத் தாடியுடன் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடை அணிந்து, முழுத் தாடியுடன் ஒருவர் கண்டி யட்டிநுவர வீதியில் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் ராசிக்க சம்பத் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.

எனினும், விசாரணைகளின்போது கைது செய்யப்பட்டவர் தளங்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரியவந்துள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், இந்து மத சம்பிரதாயங்களுக்கு அமைய தாடி வளர்ப்பதற்கு பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெற்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், குறித்த உத்தியோகத்தருக்கு திருமணத்தை முன்னிட்டு தாடி வளர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸ் சீருடையை அணிந்து புகைப்படப் படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகத் திணைக்கள மட்டத்திலான ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை