இந்தியா செய்தி தமிழ்நாடு முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: போராட்டம் நடத்திய 300 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தைத் தீபத்தூண் கல் தூணில் ஏற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தைத் தீபத்தூண் கல் தூணில் ஏற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போராட்டம் தொடர்பில், அனுமதியின்றி ஒன்றுகூடியமை, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தமை, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூண் கல் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மேலுள்ள வழக்கமான இடத்திலேயே மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மலைக்குச் செல்லும் பாதையின் நுழைவுப் பகுதியில் ஒன்றுகூடி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய இந்து முன்னணி தரப்பினர், இது தொடர்பில் நீதிமன்றத்தை மீண்டும் நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் இந்த விவகாரத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி