காணி விடுவிப்புகோரி 24 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 24 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்து, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், தற்போதைய அரசும் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி வருகின்றது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆட்சிக் காலங்களிலேயே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெருமளவில் விடுவிப்பதாகத் தற்போதைய அரசு கூறி வருகின்றது என்றும், ஆனால் […]












