உக்ரைனுக்கு ஆதரவளிப்பர்களுக்கு ஆபத்து – பிரித்தானியா எச்சரிக்கை
உக்ரைனின் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து நாசவேலை முயற்சிகளை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகமும், MI5 என அறியப்படும் அந்நாட்டின் பாதுகாப்பு சேவையும், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் , “உங்கள் நிறுவனம் இராணுவக் கொள்முதலுக்கு ஆதரவளித்தாலோ அல்லது உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு உபகரணங்களை வழங்கினாலோ, அது ஒரு இலக்காக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த செயல்பாடு பொதுவாக, தீவைப்பு போன்ற குறைந்த நுட்பமான நாசவேலை முறைகளைப் பயன்படுத்தும் பதிலி முகவர்களால் வகைப்படுத்தப்படுகிறது,” என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவிற்காக செயல்படும் முகவர்கள் என அவர்கள் விவரித்தவர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




