டெல்லியில் 11 ஆம் திகதி மோடி, புடின் சந்திப்பு
டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவின் தலைமையின் கீழ் நான்காவது முறையாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் இடையே, செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி புடின், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புச் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். உலகப் பொருளாதாரத்தில் கால் பங்கிற்கும் அதிகமான பங்கையும், உலக மக்கள் தொகையில் பாதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் […]













