உலகம் செய்தி முக்கிய செய்திகள்

புடின் ஒரு கொலையாளி; ட்ரம்பின் ‘நண்பன்’ கருத்துக்கு உக்ரைன் ஜனாதிபதி பதிலடி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘நண்பர்’ எனக் குறிப்பிட்டதற்கு, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘நண்பர்’ எனக் குறிப்பிட்டதற்கு, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ட்ரம்ப் புடினை எவ்வாறு அழைக்கிறார் என்பது அவருடைய விருப்பம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர் எதிரி. அவர் ஒரு கொலையாளி” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

CNN ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருடன் வியாழக்கிழமை நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்பு சந்திப்பின் பின்னணியில், புடினை தனது நண்பர் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக சிறந்த உறவு நிலவி வருவதாகவும், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

எனினும், ரஷ்யாவின் தாக்குதல்களால் தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், புடினை நண்பர் என அழைப்பது அவருக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதையே காட்டுவதாக ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

உக்ரைனில் பாரிய தாக்குதல்; 9 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரிமியா பாலத்தை உக்ரைன் கடுமையாக சேதப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் என இதனை வர்ணித்த ஜெலன்ஸ்கி, 110 ஏவுகணைகள், அவற்றில் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்களுக்கு சில மணிநேரங்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்தார்.

“அவர்கள் இருவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர். அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருப்பது மிகவும் சாதகமான விடயம்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

புடினை நண்பர் எனக் குறிப்பிட்ட கருத்தில் ட்ரம்ப் மீண்டும் உறுதியாக இருந்தபோதிலும், புடின் அமெரிக்காவுக்கு நண்பரா என்பது குறித்து தன்னால் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், புடினை நண்பர் என அழைப்பது குறித்து விமர்சித்த ஜெலன்ஸ்கி, அவர் ஒரு கொலையாளி எனவும், உலகில் பெரும்பாலான மக்கள் அவரை அவ்வாறே கருதுவதாகவும் கூறியுள்ளார்.

போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஊடுருவல்?

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தென்கிழக்கு போலந்தின் வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று உட்பட மூன்று பொருட்கள் ஊடுருவியதாக போலந்து தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளின் இராணுவப் பயிற்சிகள் அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் தற்செயலானது அல்ல என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஊடுருவலை ரஷ்யாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என போலந்து வர்ணித்துள்ளது.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, போலந்து வான்வெளியின் கடுமையான மீறல்களைக் கண்டித்ததுடன், இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேட்டோ போர் விமானங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஊடுருவல் தொடர்பாக ரஷ்யா இதுவரை கருத்து வெளியிடவில்லை.

போலந்து பாதுகாப்பு அமைச்சர் வ்லாடிஸ்லாவ் கோசினியாக்-கமிஷ் தெரிவிக்கையில், உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நோவி லிபோவெட்ஸ் (Nowy Lipowiec) கிராமப்புறப் பகுதியில் ஏவுகணை ஒன்று விழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய படையினர் 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் 36 நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியின் இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இடத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஏவுகணை விழுந்துள்ளதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றொரு ஏவுகணை மற்றும் ஜெட் இயந்திரத்தால் இயக்கப்படும் ட்ரோன் ஆகியவை வேறு இரு இடங்களில் விழுந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி