52 பந்துகளில் இரட்டைச் சதம்; கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது வீரர்
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் (Asia Cup Rising Stars 2026) நட்சத்திரங்கள் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தோஹாவில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற இப்போட்டியில் 250 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஏ அணிக்காகக் களமிறங்கிய 15 வயதான சூர்யவன்ஷி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி சாதனைகளைப் படைத்தார்.
அவர் 53 பந்துகளில் 204 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கின.
இதன் மூலம், லிஸ்ட் ஏ (List A) ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தினார். இதற்கு முன்னர் நியூஸிலாந்தின் சாட் போவ்ஸ் 103 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும், 28 பந்துகளில் சதம் அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்தார். அதேபோல், 40 பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடந்து அதிவேகமாக 150 ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற சாதனையையும் பதிவு செய்தார்.
அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்தியா ஏ அணி வெற்றி இலக்கை மிக விரைவாக எட்டியது.




