இலங்கை செய்தி

சிவாஜிலிங்கத்தின் வழியில் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வழியில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு வழமை போன்று இம்முறையும் முன்னெடுக்கப்படும் எனவும், எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் தமிழ் மக்களை அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வழியில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு வழமை போன்று இம்முறையும் முன்னெடுக்கப்படும் எனவும், எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் தமிழ் மக்களை அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி. கவிச்செல்வன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை உலகத் தமிழர்களால் கொண்டாடப்படவுள்ளது.

உலகெங்கும் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இடமான வல்வெட்டித்துறை, ஆலடி வீதியில் உள்ள காணியில் வருடா வருடம் சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் எழுச்சிபூர்வமாகப் பிரதான நிகழ்வு இடம்பெறுவது வழக்கம்.

இம்முறை மேதகுவின் 72ஆவது பிறந்தநாள் அண்மித்துள்ள நிலையில் சிவாஜிலிங்கம் மறைந்துவிட்டார். இருப்பினும், அவரது வழியில் எத்தடை வரினும் அதே இடத்தில் மேதகுவின் பிறந்ததின நிகழ்வை வருடா வருடம் கொண்டாடியே தீருவோம். சிவாஜிலிங்கம் வழியில் அவர் முன்னெடுத்த விடயங்களைத் தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் முன்னெடுப்போம்.

எனவே, ஊர் மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மேதகுவின் 72ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப் பெரும் எழுச்சியுடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை