“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

பொறுப்புக் கூறலில் NPP அரசு ஆமை வேகம்: சாணக்கியன் சீற்றம்

  • September 10, 2026
  • 0 Comments

“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழிகள் குறித்து இதுவரை தெளிவான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சாணக்கியன் எம்.பி. […]

வடக்கில் உள்ள விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாட்டில் வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு வேறொரு சட்டமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார். இலங்கை செய்தி

நாமல் சிறையில் அடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கொண்டாட்டம்

  • September 10, 2026
  • 0 Comments

வடக்கில் உள்ள விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாட்டில் வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு வேறொரு சட்டமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டு வருகின்றது. விகாரைகளுக்குச் […]

"முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களைக் கர்மவினை தற்போது துரத்தத் தொடங்கியுள்ளது" இலங்கை செய்தி

தமிழினத்தை அழித்தவர்களை துரத்தும் கர்மவினை

  • September 10, 2026
  • 0 Comments

“முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களைக் கர்மவினை தற்போது துரத்தத் தொடங்கியுள்ளது” என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். “கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகின்றது?” என்றும் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்புப் பணியாள் தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- […]

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் போலவே இரு தரப்பினரின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் […]

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் இல்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) புதன்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றமாட்டோம்: இஸ்ரேல் உறுதி

  • September 9, 2026
  • 0 Comments

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் இல்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) புதன்கிழமை தெரிவித்துள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் இரு இஸ்ரேலிய அமைச்சர்கள் பாலஸ்தீனியர்களைக் கடற்கரை பிராந்தியமான காசாவிலிருந்து பெருமளவில் வெளியேற்றுவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியுப்லியானா (Ljubljana) நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிதியோன் சார், “காசா பகுதியில் இருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது நாடுகடத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை” என்று […]

கிளிநொச்சி - ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

  • September 9, 2026
  • 0 Comments

கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்றதையடுத்து காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியா அறிவித்துள்ள தடைகள் “பிரித்தானிய யூதர்களுக்கு ஒரு கருப்பு நாள்” என Chief Rabbi Sir Ephraim Mirvis விமர்சித்துள்ளதுடன், “யூதர்களுக்கு எதிராக வெறுப்பை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு” இத்தடைகள் மேலும் துணிச்சலளிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

“பிரித்தானிய யூதர்களுக்கு ஒரு கருப்பு நாள்”

  • September 9, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியா அறிவித்துள்ள தடைகள் “பிரித்தானிய யூதர்களுக்கு ஒரு கருப்பு நாள்” என Chief Rabbi Sir Ephraim Mirvis விமர்சித்துள்ளதுடன், “யூதர்களுக்கு எதிராக வெறுப்பை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு” இத்தடைகள் மேலும் துணிச்சலளிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எனினும், தன்னை ஒரு “பெருமைமிக்க பிரித்தானிய யூதர்” என்று கூறிக்கொள்ளும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபேண்ட், Chief Rabbiயின் இந்த அறிக்கையுடன் தான் உடன்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். “நான் பெரிதும் மதிக்கும் Chief Rabbi யின் கருத்துக்களுடன் […]

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில், தங்களின் இயற்கை வாழ்விடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியொன்றில் இருந்து 5 குட்டி ஒராங்குட்டான்கள் (Orangutans) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியா செய்தி

இந்தியாவில் 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு:விசாரணை தீவிரம்

  • September 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில், தங்களின் இயற்கை வாழ்விடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியொன்றில் இருந்து 5 குட்டி ஒராங்குட்டான்கள் (Orangutans) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு தொலைவிலுள்ள காட்டுப் பகுதிக்கு இவை எவ்வாறு வந்தடைந்தன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட குட்டி ஒராங்குட்டான்கள் தங்களுக்குரிய வெப்பமண்டல மழைக்காடுகளிலிருந்து விலகி, காட்டுப் பகுதியில் ஒன்றாக அமர்ந்து வாழைப்பழங்களை உட்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒராங்குட்டான்கள் இந்தியாவை தாயகமாகக் கொண்ட விலங்குகள் […]

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • September 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கைக்கு […]

டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.  செய்தி

டெல்லியில் 11 ஆம் திகதி மோடி, புடின் சந்திப்பு

  • September 9, 2026
  • 0 Comments

டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவின் தலைமையின் கீழ் நான்காவது முறையாக நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் இடையே, செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி  புடின், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புச் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். உலகப் பொருளாதாரத்தில் கால் பங்கிற்கும் அதிகமான பங்கையும், உலக மக்கள் தொகையில் பாதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் […]