இந்தியப் பெருங்கடலில் வலுவான நிலநடுக்கம் பதிவு – இலங்கைக்கு பாதிப்பா?
இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 17.78° தெற்கு அட்சரேகை மற்றும் 65.82° கிழக்கு தீர்க்கரேகை ஆகிய ஆயங்களில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தேசிய சுனாமி முன்னறிவிப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.




