செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்ட்டில் உள்ள கராரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நிகில் சௌத்ரி 35 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து சார்பில் சாம் கரன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 13.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அனியூரின் டொனால்ட் மற்றும் பில் சோல்ட் ஆகியோரின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்காக 10 ஓவர்களில் 151 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

டொனால்ட் 32 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களைக் குவித்தார். பில் சோல்ட் 30 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

டொனால்ட் 18 பந்துகளில் அரைச்சதம் அடித்ததுடன், இங்கிலாந்து அணிக்காக T20 போட்டிகளில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பில் சோல்ட் 24 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். இதன்போது ஜோயல் டேவிஸின் ஒரு ஓவரில் மாத்திரம் 31 ஓட்டங்கள் பெறப்பட்டன.

சதத்தை நெருங்கிய டொனால்ட், ரிலே மெரிடித்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரில் சோல்ட்டும் ஆட்டமிழந்தார். எனினும், டொம் பான்டன் 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதிலும், பின்னர் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி 184 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி