அரச குடும்ப சொத்துக்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிய Andrew?
Prince Andrew அரசிற்குச் சொந்தமான தங்குமிடங்களை வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் Crown Estate அமைப்பிடமிருந்து குத்தகைக்கு எடுத்த ராயல் லாட்ஜ் எஸ்டேட்டில் உள்ள மூன்று வீடுகளே வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் (NAO) அறிக்கையில்மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும்,வாடகைத் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், மன்னர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபடாத ஆண்ட்ரூவின் மகள்களான Princess Eugenie […]













