சேர்பியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி நிர்ணயம்
ஐரோப்பிய நாடான சேர்பியாவில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சேர்பியாவின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற சபாநாயகர் அலெக்சாண்டர் குபிக், ஜனாதிபதித் தேர்தல் திகதியை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.




